×

மதுரை சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கோரி மனு

 

மதுரை, ஜன. 30: மதுரை சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த இயற்கை பண்பாட்டு மையம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலக குறைதீர் முகாமில் அளிக்கபப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அய்யனார் அணை பகுதிக்கு அருகில் குடியிருக்கும் ஒரு சமூக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதுடன் இவர்களது பெண் குழந்தைகளின் பள்ளி கல்வி இடைநிற்றலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

யானைகளால் சேதமடைந்த விவசாயி இடும்பசாமியின் நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மாவட்ட வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை ஆய்வு செய்து யானைகள் வழித்தடத்தை அங்கீகரிக்கவும் வேண்டும். சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவும், அய்யனார் கோயில் ஓடை நீர்த்தேக்கத்தை சீரமைக்கவும் வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

The post மதுரை சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Madurai Chamanattam ,Kanmai ,Madurai ,Chamanattam Kanmayai ,Madurai's Natural Culture Center ,Ayyanar ,
× RELATED சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில்...